பிக்பாஸ் 17-வது போட்டியாளர் இவர் தான்....? - அவரே கொடுத்த தகவல்..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் உள்ள 17 போடியாளர்களில் இதுவரை 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்று விட்டனர். அதில், நடிகை மீரா மிதுன் தான் இறுதியாக உள்ளே சென்றார். 

இந்நிலையில், இவர் தான் அந்த 17-வது போட்டியாளர் என சில தகவல்கள் இணையத்தில் சுற்றி வர ஆரம்பித்தன. அதில், ஒரு சிலர் பவர் ஸ்டார் சீனிவாசன் தான் அடுத்த போட்டியார் என்று கூறி வந்த நிலையில் நேற்று பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர் தான் அந்த 17-வது போட்டியாளர் என்று தகவல் பரவின. 

அதனை நம்முடைய தளத்தில் கூட வெளியிட்டிருந்தோம். ஆனால், நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை என பனிமலர் தற்போது விளக்கம் கொடுதுள்ளார். 

அவர் கூறியதாவது, "அடப்பாவிகளா... நான் பிக்பாஸ் வீட்டுக்கெல்லாம் போகலங்க, என் வீட்லதான் இருக்கேன் 😹 ". இதோ அவர் பதிவு செய்த ட்வீட்,