45 ஆண்டு கால சாதனை முறிந்தது - என்ன World Cup நடத்துறீங்க..?? - ICC-யை கழுவி ஊத்தும் கிரிக்கெட் ரசிகர்கள்..?


2019-ம் ஆண்டிற்க்கான உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருவது கிரிக்கெட் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. 

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இணைந்து 2019 உலகக்கோப்பை தொடரை நடத்தி வருகிறது. 

இந்த முறை நாக் அவுட் முறையில் இல்லாமல் ரவுண்டு ராபின் முறையில் ஏராளமான போட்டிகளுடன் பிரம்மாண்டமான தொடராக நடத்தப்பட திட்டமிட்டு இருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC).

இந்நிலையில், நடந்து வரும் லீக் போட்டிகளில் தொடர்ந்து மழை குறுக்கிட்டு வருகின்றது. முதலில் இலங்கை - ஆப்கானிஸ்தான் போட்டி. எனினும், அந்த போட்டியில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி முழுமையாக நடைபெற்றது. 

அடுத்து கடும் மழையால், இலங்கை - பாகிஸ்தான் போட்டி மற்றும் இலங்கை - வங்கதேசம் போட்டி ஆகிய இரண்டும் முற்றிலுமாக டாஸ் போடாமல், ஒரு பந்து கூட வீசாமல் கைவிடப்பட்டது. 

தென்னாப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி 7.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் மழையால் கைவிடப்பட்டது. இதனால், அணிகளும், ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இதனிடையே, என்ன World Cup நடத்துறீங்க..? கிரிக்கெட் கிரவுண்டில் மேட்ச் நடத்துவீர்கள் என்று பார்த்தால் நீச்சல் குளத்தில் மேட்ச் நடத்தி கொண்டிருக்கிறீர்கள். ஒன்று, போட்டி நடக்கும் இடத்தை மாற்றுங்கள். அல்லது, மழை முடியும் வரை போட்டிகளை ரீ-செடியூல் செய்யுங்கள் இரு நாடுகளுக்கான இடையேயான போட்டியா இது..? உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலகக்கோப்பை போட்டி. என்று தாறுமாறாக ICC-யை கழுவுகிறார்கள் ரசிகர்கள். 

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், கடந்த 45 ஆண்டுகால சாதனையை இந்த வருடம் ICC முறியடித்துள்ளது. ஆம், உலகக்கோப்பை வாரலாற்றில் இது வரை அதிக பட்சம் இரண்டு போட்டிகளுக்கு மேல் ரிசல்ட் இல்லாமல் அல்லது கைவிடப்பட்டது கிடையாது. இந்த முறை லீக் போட்டிகளே தாண்டாத நிலையில் மூன்று போட்டிகள் கைவிடப்பட்டுள்ளது. 
Number Of Matches Ended as No Result/Abandoned


 • 1975WC - 0 
 • 1979WC - 1 
 • 1983WC - 0 
 • 1987WC - 0 
 • 1992WC - 2 
 • 1996WC - 1 
 • 1999WC - 1 
 • 2003WC - 2 
 • 2007WC - 0 
 • 2011WC - 1 
 • 2015WC - 1 
 • 2019WC - 3*