நானா பண்ணேன்..! போய், விஜய்கிட்ட கேளுங்க..! - எஸ்.ஏ.சி காட்டம் - என்ன காரணம்..?


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் "பிகில்" என்ற படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21-ம் தேதி வெளியானது.  ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டரில் விஜய் தந்தை, மகன் என இரு கெட்டப்பில் இருந்தார்.

இதில் வயதான விஜய் காவி வேஷ்டி கட்டியிருந்தது சிறிது சர்ச்சையை கிளப்பியது. மக்களவை தேர்தலின் போது பா.ஜ.க மட்டும் ஜெயித்து விட்டால் எல்லோரும் காவி கட்டிக்கொண்டு அழைய வேண்டியது தான் என எஸ்.ஏ.சி கிண்டலாக ஒரு மேடையில் பேரினார். 

இந்நிலையில், அவருடைய மகன் விஜய் காவி உடுத்தியிருப்பது குறித்து தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கையில், என்னிடம் என் படத்தை பற்றி மட்டுமே கேளுங்கள்.