விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து இந்திய அணியை சீண்டிய பாக்..! - கடும் கோபத்தில் இந்திய மக்கள்


இந்திய விமானப்படை வீரரும் விங் கமாண்டருமான தமிழகத்தை திரு.அபிநந்தனை வைத்து, இந்திய அணியை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று வெளியிட்டுள்ள மோசமான விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2019-ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் வரும் ஜூன் 16-ம் தேதி, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டி தொடர்பாக விங் கமாண்டர் அபிநந்தனை வைத்து, இந்திய வீரர்களை சீண்டும் விதமாக பாகிஸ்தான் டிவி ஒன்று விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இந்த விளம்பரம் இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகின்றது. 

இருங்கடா டேய்.. விளம்பரமா பண்றீங்க விளம்பரம்... 16-ம் தேதி பம்பரம் மாதிரி சுத்தி விட்டு அடிக்குறோம்..!