வாவ்.! - பிக்பாஸ் ஃபாத்திமா பாபு வா இது..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்


எண்டமோல் ஷைன் நிறுவனம் தயாரித்து வரும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக உள்ளார் பாத்திமா பாபு. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், சினிமாவில் நடிகையாகவும் இருந்த அவருக்கு புதிதாக அறிமுகம் தேவையில்லை. 

அவர் பிக்பாஸ் வந்தபிறகு, அவரது பல பழைய சர்ச்சைகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.வீட்டில் உள்ள பலரும் இவருக்கு வயது அதிகம் என்ற காரணத்தினால், இவரை அம்மா அம்மா என்று தான் அழைக்கிறார்கள். 

இவரும் எந்த பிரச்சனை என்றாலும், தன்னுடைய தெளிவான பேச்சால் சுமூகமாக அதனை தீர்த்து சமாதனம் செய்து வைத்து தன்னுடைய அனுபவ முதிர்ச்சியை காட்டுகிறார். 

ஆரம்ப காலத்தில் இவர் மீது சில சர்ச்சையான வதந்திகள் பரவியது. தொலைகாட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த போது பிரபல அரசியல் கட்சி தலைவர் ஒருவரால் தனிப்பட்ட முறையில் சில அத்துமீறல்களுக்கு உள்ளானார் என்பது தான் அந்த வதந்தி. 

இது வதந்தியோ அல்லது உண்மையோ..? ஆனால், இன்றளவும் இந்த விஷயத்தை பலரும் மறந்திருக்க மாட்டார்கள். குறிப்பாக, 90's கிட்ஸ். இந்நிலையில், அவரது பழைய புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் சுற்றிவருகிறது. 

அவரா இது என கேட்க தோன்றும் அளவுக்கு அந்த புகைப்படத்தில் அவர் அடையாளமே தெரியாத அளவுக்கு உள்ளார். 

இதோ, அந்த புகைப்படம்

வாவ்.! - பிக்பாஸ் ஃபாத்திமா பாபு வா இது..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் வாவ்.! - பிக்பாஸ் ஃபாத்திமா பாபு வா இது..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம் Reviewed by Tamizhakam on June 28, 2019 Rating: 5
Powered by Blogger.