"ல்" "ல்" "ல்" - பிகில் படத்தில் "ல்" செண்டிமென்ட் - காரணம் என்ன..?


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் ‘பிகில்’ படத்தில் நடிகை விஜய் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். 

இதில் அப்பா வேடத்துக்கு, ‘பிகில்’ என்றும், மகன் வேடத்துக்கு, ‘மைக்கேல்’ என்றும் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மகன் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். 

‘வில்லு’ படத்துக்கு பிறகு விஜய் யுடன் நயன்தாரா ஜோடியாக நடித்து வரு கிறார். விவேக், ஜாக்கி ஷராப், கதிர் ஆகிய மூன்று பேரும் முக்கிய வேடங்களில் நடிக் கிறார்கள்.  

மேலும், கதாநாயகி நயன்தாரா வேடத்துக்கு, ‘ஏஞ்சல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது, விஜய் நடிக்கும் 63-வது படம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.