அஜித் பாடலை பாடும் ஜெயம் ரவி..!


’அடங்க மறு’ படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கத் தொடங்கிய படம் 'கோமாளி'. அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள இப்படத்தில், ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ளார். 

'கோமாளி' படத்தில் ஜெயம் ரவிக்கு நாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளனர். பாலிவுட் நடிகை கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்து, ஆகஸ்ட்டில் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், நடிகர் ஜெயம்ரவி கையில் "காதல் மன்னன்" பாடல் புத்தகத்தை வைத்துக்கொண்டு "உன்னை பார்த்த பின்பு நான்" பாடலை பாடுவது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.