பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ்..? - கைதாகிறார் மீரா மிதுன்..? - ரசிகர்கள் ஷாக்..!


மீரா மிதுன் குறித்து புதிதாக சொல்லி தெரியவேண்டியதில்லை. அழகி போட்டி சம்பந்தமாக நான்கு இவென்ட் மேலார்களை ஏமாற்றியது மட்டுமில்லாமல், அவர்கள் மீது பாலியல் புகாரையும் கொடுத்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். 

இவர் மீது அந்த நான்கு பேரும் வழக்கு பதிவு செய்துள்ளார். மொத்தம், நான்கு CSR இந்த மீரா மிதுன் மீது உள்ளது. இந்நிலையில், இவரால் மிகவும் பாதிக்கப்பட்ட Joe என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீரா மதுன் மீதான தனது குற்றச்சாட்டை வைத்துள்ளார். நான்கு CSR உள்ள ஒரு பெண் குற்றவாளியை எப்படி பிக்பாஸ் விதிகளை மீறி போட்டியாளராக தேர்வு செய்தார்கள். 

மீரா மிதுன் பிக்பாஸ்-க்கு சென்று விட்டால் விஜய் டிவி நம்மை காப்பற்றும் என்று நம்பி உள்ளே சென்று விட்டார்.இத்தனை நாள் அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது, நான் வெளியூரில் இருக்கிறேன் என்று ஏமாற்றி வந்தார் மீராமிதுன். இப்போது, அவர் எங்கே இருக்கிறார் என தமிழ்நாட்டுக்கே தெரியும்.