இந்த வருடம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான்..! - அதிரடி அப்டேட்..!


சீமராஜா, மிஸ்டர்.லோக்கல் என அடுத்தடுத்து அடித்த இரண்டு ப்ளாப்-களால் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் அப்செட். காரணம், சிவகார்த்திகேயன், நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை நடத்தும் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், அடுத்தடுத்து இரண்டு தோல்விப்படங்கள் கொடுத்தால் முன்னணி நடிகர்களின் சினிமா வாழ்கையின் அடித்தளத்தையே அசைத்து பார்த்துவிடும். அப்படி இருக்க சிவகார்த்திகேயன் எம்மாத்திரம். 
அதனால், மிகவும் கவனமாக தனது அடுத்த படத்தில் பணியாற்றி வருகிறார் சிவகார்த்திகேயன். மிஸ்டர்.லோக்கல் படத்திற்கு பிறகு இந்த வருடமே இன்னும் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் "SK14" திரைப்படம் இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆகின்றது.