வனிதா உக்கிரம் - கதறி அழும் மீரா மிதுன் - கலவரமான முதல் ப்ரோமோ..!


தமிழ் பிக்பாஸ் நிகழ்சியின் ஐந்தாம் நாளான இன்று நடிகை மீரா மிதுன் கதறி அழும் காட்சிகளை முதல் ப்ரோமோ-வாக வெளியிட்டிருக்கிறார்கள். 

மீரா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே நடிகை அபிராமி மீரா மிதுனை வார்த்தைகளால் கடுமையான தாக்கினார். பிறகு இருவரும் சமாதானம் ஆகினார்கள். இவர்கள் பிக்பாஸ் வீட்டில் தான் எதிரிகள். ஆனால், வெளியில் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். 

அதை தொடர்ந்து நடிகை வனிதா மீரா மிதுனுடன் தற்போது பயங்கரமாக சண்டை போட்டுள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு மிக கடுமையாக மீராவை கண்டிக்கவே பொறுத்துக்கொள்ள முடியாத அவர் ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டார்.