கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்தபடி ஆட்டம் போட்ட லொஸ்லியா..! - வைரலாகும் நீக்கப்பட்ட வீடியோ


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் வீட்டில் அமைதியாக, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லொஸ்லியா. 

அவ்வப்போது சான்ஸ் கிடைக்கும்போது கேமரா முன்பு ஒரு குத்தாட்டத்தை போட்டுவிடுகிறார். இந்த சிறு நடன அசைவுக்களுக்கே, இலங்கை பெண் என்றாலும் தமிழகத்தில் மிக பெரிய ஆர்மி உருவாகும் அளவுக்கு இப்போது ஆர்மியில் ஆட்கள் தீவிரமாக இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அடிக்கடி நடனம் ஆடும் லொஸ்லியா, மற்றொரு போட்டியாளரான முகேன் ராவ்வுடன் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி நேற்று செம்ம டான்ஸ் ஒன்றை போட்டுள்ளார். 

ஆனால், நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் 1 மணி நேரம் தான் என்பதால் பல காட்சிகளை நீக்கி விடுகிறார். இருந்தாலும் ஹாட்ஸ்டாரில் நீக்கப்பட்ட காட்சிகள் கூட ஒளிப்பரப்பப்படுகிறது. 

இதோ அந்த வீடியோ,
Share it with your Friends