பிகில் என்ட்ரி - அடம் பிடிக்கும் விஜய் - செதறி ஓடும் படங்கள் - கெத்து காட்டும் தளபதி - மாஸ் அப்டேட்


இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் இரு வேடங்களில் நடிக்கும் பிகில் படத்தின் 3 போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ளன. 

வெளியான நாளில் இருந்து நிமிடத்திற்கு நிமிடம் இணையத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை எகிறி வருகின்றது. பாலிவுட் நடிகர் JACKIE SHROFF மற்றும் காமெடி நடிகர் விவேக் உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். 

விஜய்- யின் பிகில் திரைப்படம், தீபாவளிக்கு திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதனை தொடர்ந்து, தீபாவளி ரிலீஸ் என்று ஆரம்பிக்கப்பட்ட ஒருபடம் கூட தீபாவளிக்கு தியேட்டர்களை புக் செய்ய முன்வரவில்லை என்று கூறுகிறார்கள். 

தீபாவளிக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே கணிசமான தியேட்டர்களை புக் செய்துவிட்டது "பிகில்".தீபாவளிக்கு வெளியாகும் விஜய் படங்கள் அனைத்தும் சமீப காலமாக ஹிட் அடித்து வருகின்றன.