காப்பான் - தெலுங்கு பதிப்பின் தலைப்பு அறிவிக்கப்பட்டது..!


பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் "அயன்" மற்றும் "மாற்றான்" ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக  சூர்யா நடித்துவரும் படம் ‘காப்பான்’. 

நடிகையும், நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷா சைகள் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, விவேக் பாடல்கள் எழுதுகிறார். கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து மூவரும் இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். 

சூர்யாவின் 37-வது படமான இதில், இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர். 

கடந்த வருடம் (2018) ஜூன் 25-ம் தேதி இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தெலுங்கில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சூர்யாவின் ஒவ்வொரு படமும் தெலுங்கில் டப் செய்து திறையிடப்படுகிறது. அந்த வகையில், இந்த படத்தை "பந்தோபஸ்த்" என்ற பெயரில் தெலுங்கில் ரிலீசாகிறது.
காப்பான் - தெலுங்கு பதிப்பின் தலைப்பு அறிவிக்கப்பட்டது..! காப்பான் - தெலுங்கு பதிப்பின் தலைப்பு அறிவிக்கப்பட்டது..! Reviewed by Tamizhakam on June 27, 2019 Rating: 5
Powered by Blogger.