நடிகை வனிதா விஜயகுமாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்..!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 வீட்டில் நேற்று பெரிய கலவரமே நடந்து முடிந்துள்ளது. நடிகை மதுமிதா தமிழ் கலாச்சாரம் பற்றி பேசியது வேறு சில போட்டியாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. 

அதனால் கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது பேசிய வனிதா விஜயகுமார் "நீ படத்தில் கவர்ச்சியாக நடிக்க கேட்டால் நடிக்க மாட்டாயா. அது போல தான் இதுவும்" என கேட்டார்.

இப்படி ,தமிழ் கலாச்சாரத்தின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவது போன்ற காட்சிகள் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகின்றன. எல்லாவற்றையும் செய்து விட்டு இது விளையாட்டு, Fun என போட்டியாளர்கள் கூறுவது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. 

தாங்கள் செய்வதை 4 கோடி பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருகிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் அவர்கள் இஷ்டத்துக்கு என்னவோ செய்து தமிழக இளசுகள், குழந்தைகைள் மனதில் கலாச்சாரம் என்ற ஒன்றே இல்லை என்பது போன்றபிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது. மேலும், பிக்பாஸ-ன் முன்னாள் போட்டியாளர் ஒருவர் வனிதாவை கடுமையாக சாடியுள்ளார்.

Share it with your Friends