வாயை மூடிக்கிட்டு இரு..! - நடிகை காயத்ரி ரகுராம், குஷ்பு இடையே வெடித்த மோதல்..!


நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். நடிகை காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதாக கட்சியில் இருக்கிறார். நாட்டு நடப்புகள் குறித்து இருவரும் அடிக்கடி டுவிட்டரில் மோதிக் கொள்வார்கள். இந்த முறை கொஞ்சம் ஓவராக மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் 22 வயது இளைஞர் ஒருவரை, ஒரு சிலர் பிடித்து வைத்துக் கொண்டு ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிடுமாறு அடித்து துன்புறத்திய காட்சி இணையதளத்தில் வெளியானது. பின்னர் அந்த இளைஞர் இறந்து விட்டார். இந்த வீடியோ குறித்துதான் இருவரும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த வீடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்ட குஷ்பு, "ஜெய்ஸ்ரீராம் என்று சொல்ல சொல்லி ஒரு இளைஞரைன கொன்று விட்டனர் இதுதான் இந்தியாவா?" என்று கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், "இந்துக்களை கொலைகாரர்களாக சித்தரிப்பது இப்போது டிரண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் தவறு செய்யும்போது குஷ்பு வாய்திறப்பதில்லையே ஏன்?" என்று தனது டுவிட்டரில் கேட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்துள்ள குஷ்பு, “உங்களை போன்றவர்களுடன் விவாதம் செய்ய நான் தயாராக இல்லை. உங்கள் உறவினர்கள் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். எனவே வாயை மூடிக்கொண்டு இருக்கவும்” என்றார். 


Share it with your Friends