ஒரே இரவில் என்னை தூக்கி எறிந்து விட்டார்கள் - விஜய்சேதுபதி படக்குழு மீது பாய்ந்த நடிகை அமலா பால்..!


நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடை படத்தின் டீசர் பலரையும் வியக்க வைத்தது. இந்த படத்தின் மிகவும் தைரியமாக ஆடையின்றி சில காட்சிகளில் நடித்துள்ளார் அமலா பால். இந்நிலையில், விஜய் சேதுபதி அடுத்த நடிக்கவுள்ள தனது 33-வது படத்தில் அமலா பாலை தான் ஹீரோயினாக புக் செய்தார்கள். 

ஆனால்,அவரை ஓவர் நைட்டில் தூக்கி விட்டு மேகா ஆகாஷை ஹீரோயினாக மாற்றிவிட்டது படக்குழு. இதனால் அதிர்ச்சியான அமலா பால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். காரணமே இல்லாமல், VSP33 படத்தில் இருந்து நான் தூக்கி ஏறியப்பட்டுள்ளேன். தயாரிப்பு நிறுவனத்தின் மோசமான நடவடிக்கையாக நான் இதை பார்க்கிறேன். 

நான் படகுழுவுடன் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தை கூறுகிறார்கள். என்னுடைய பத்து ஆண்டு சினிமா வாழ்கையில் இது போன்ற குற்றச்சாட்டு என் மீது வந்தது உண்டா. ஆடை படத்தின் டீசரை பார்த்து விட்டு தான் என்னை படத்தில் இருந்து தூக்கியுள்ளார். 

ஆடை படத்தினால் என்னுடையஇமேஜ் கெட்டுப்போய்விட்டது என்பது தயாரிப்பு நிறுவனத்தின் எண்ணம். ஆனால், என்னுடைய இமேஜ் எந்த விதத்திலும் கெட்டுப்போகவில்லை. என ஒரு இரண்டு பக்கங்களுக்கு எழுதி தள்ளியுள்ளார் அமலா பால். 

Share it with your Friends