வடிவேலுவால் தூக்குபோட்டு கொண்ட மேனேஜர், பால் டாயில் குடித்த பெண் - பிரபல நடிகர் அதிர்ச்சி குற்றச்சாட்டு


வைகைப்புயல் வடிவேலு 1991-ம் ஆண்டு என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் அறிமுகமானார். நடிகர் ராஜ்கிரனை எதேர்ச்சையாக ஒரு ட்ரெயினில் சந்தித்த வடிவேலு பிறகு அவருடன் பேசி நட்பாகி ராஜ்கிரண் மூலமாகத்தான் சினிமாவில் நுழைந்தார். 

அதுவும் ராஜ்கிரண் பாடத்திலேயே அறிமுகமானார். அதன் பிறகு அவருடைய வளர்ச்சி படிப்படியாக உயர்ந்து உச்சத்தை தொட்டது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவனாக விளங்கினார். 

ஆனால், பிரபல அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டார் வடிவேலு. எந்த ஒரு நடிகரும் தன் மீது கட்சி வாடையோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தின் வாடையோ வீசாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், வடிவேலு அதனை மறந்தார். 

Share it with your Friends