ஹனிமூனிற்கு சென்ற விக்னேஷ் சிவன் நயன்தாரா.. புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி..!


கோலிவுட்டின் தற்போதைய ஹாட் லவ் ஜோடி என்றால் அது விக்னேஷ் சிவன் - நயன்தாரா தான். இருவரும், காதலிப்பதை தாண்டி அடிக்கடி வெளிநாடுகளுக்கு விசிட் அடித்து தங்களது காதலை கொண்டாடி வருகிரார்கள். 

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளையும், லூட்டிகளையும் பார்க்கலாம். ஆனால், இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். இருப்பினும், ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது காதல் ஜோடிகளின் முக்கிய சுற்றுலாத்தளமாக பார்க்கப்படும் சாண்டோரினி நகரில் இருவரும் ஜோடியாக வலம் வருகின்றனர். 

இந்த நகரம் புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் ஹனிமூன் செல்லும் முக்கிய நகரமாக இருந்து வருகிறது. இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு 'நாங்கள் வாழ்நாளில் செல்ல வேண்டும் என்று நினைத்த கனவு உலகத்திற்கு பறந்து கொண்டிருக்கின்றோம்' என கூறி பதிவிட்டுள்ளார்.