அனுஷ்காவை பார்த்தாவது திருந்த வேண்டாமா..? - பிரபல நடிகை எடுத்த விபரீத முடிவு..!


உடல் எடையை எப்படி கட்டுக்குள் வைத்துக்கொண்டு ஃபிட்டாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி எடுக்கபட்ட திரைப்படம் "இஞ்சி இடுப்பழகி".

இந்த படத்திற்காக தனது உடல் எடையை இரண்டு மடங்காக உயர்த்தி குண்டு பூசணிக்காய் போல மாறினார் நடிகை அனுஷ்கா. அதன் பிறகு, கிட்டதட்ட மூன்று ஆண்டுகள் அந்த உடல் எடையை குறைக்க படாதபாடு பட்டார். அதற்குள், அவருடைய மார்கெட் காலியாகிவிட்டது. 

இப்போது, இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகவுள்ள புரட்சிதலைவி.டாக்டர்.ஜெ.ஜெயலலிதா அம்மா- அவர்களின் வாழ்கை வரலாற்றை "தலைவி" என்ற பெயரில் படமாக எடுக்கவுள்ளனர். இந்த படத்தில் ஜெயலலிதா அம்மா-வாக நடிக்கவிருப்பது வேறு யாருமில்லை நம்ம கங்கனா ரணவத் தான்.