அஜித் - விஜய்யின் அடுத்த படத்தில் இயக்குனர் - அடிபடும் ஒரே இயக்குனரின் பெயர்..! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் உள்ள மார்கெட் மற்றும் ரசிகர்கள் பாட்டாளம் குறித்து சொல்லி தெரியவேண்டியதில்லை. 

இவர்களின் கால்ஷீட்டுக்காக பல முன்னணி இயக்குனர்கள் காத்துக்கிடக்கிறார்கள். இந்த இருவரின் படங்களும் தமிழ் சினிமாவில் முக்கிய பங்கு வகிக்கும். பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியில் இந்த இருவரது படங்களும் எளிதாக 100 கோடி என்ற இலக்கை எட்டிவிடுகின்றன.

ஒவ்வொரு முறை இவர்களது படங்கள் வரும்போதும் வசூலில் பெரிய மாற்றம் ஏற்படும். அடுத்து அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், விஜய்யின் 64வது படமும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. 

இந்த நேரத்தில் தான் இருவரின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த இருவரது அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதில் ஒரு பெரிய இயக்குனரின் பெயர் அடிபடுகிறது.