இது தான் சிம்புவின் கேரக்டர் - வீடியோவாகவே வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்


சந்து பொந்து, இண்டு இடுக்கு என பல விதமான சர்ச்சைகளில் சிக்கி சினிமாவை விட்டே போகிறேன் என்று சொல்லும் அளவுக்கு நடிகர் சிம்பு வரலாறு மிகவும் மோசமானது. 

படத்தை எடுத்தோமா, ரிலீஸ் செய்தோமா என்று இல்லாமல் நடிகைகளுடன் காதல், கசமுசா, பீப் பாடல் என மீடியாகளில் இவரது பெயர் ஏதாவது ஒரு விதத்தில் அடிபட்டுக்கொண்டே இருக்கும். 

ஆனால், இவருக்கென உள்ள ரசிகர் பாட்டாளம் மட்டும் இவருடன் எப்போதுமே இருக்கின்றது. இவரது, குணாதிசயம் பற்றி பலரும் பேச நாம் கேட்டிருப்போம். 

தற்போது நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் நடிகர் சிம்பு பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சிம்பு-கவுதம் கார்த்திக் இருவரும் "மாஃப்டி" என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் இணைந்து நடித்து வருகின்றனர். சிம்புவுக்கு அதில் சிறிய கதாபாத்திரம் என்பதால் அவர் ஒரே வாரத்தில் தனது ஷூட்டிங்கை நிறைவு செய்யவுள்ளார்.