என்னை பற்றிய இந்த செய்தி எரிச்சலை தருகின்றது - செம்ம கடுப்பில் நடிகை ரெஜினா


தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரெஜினா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் இவர் சமீபத்தில் பாலிவுட்டிலும் கால் பதித்து, முதல் படத்திலேயே ஓரினச்சேர்க்கையாளராக நடித்து ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தினார். 

இப்போது, தமிழில் கசட தபற, தெலுங்கில் எவரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கு சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் ஒருவர் உடன் சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் பரவின. 

இப்போது, நடித்துக்கொண்டிருக்கும் படங்களை முடித்துவிட்டு இந்த வருடத்தின் இறுதியில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் உலா வந்தன.