செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர வைத்த அயோக்யா பட நடிகை ராஷி கண்ணா..!


நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான `அயோக்யா’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடிகை ராஷி கண்ணா நடித்திருந்தார். தெலுங்கு படங்களில் அறிமுகமாகி நடித்து வந்த ராஷி கண்ணா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்.

‘அயோக்யா’ அவர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மூன்றாவது தமிழ்ப் படம். இவருக்கு தமிழ் தெரியாது என்பதால் படத்தில் அவருக்கு டப்பிங் குரல்தான் கொடுத்திருந்தனர். ‘அயோக்யா’ படத்தில் ராஷிக்கு பின்னணி குரல் கொடுத்தது பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவி.

இந்தப் படத்தை பார்த்து, டப்பிங் பேசியதற்காகத் தன் பெயர் டைட்டிலில் இல்லை என மிகுந்த வேதனையுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், டிரைவர், கார்பென்டர், மெஸ் அண்ணா பெயர்களைப் போட்டிருக்காங்க ரொம்ப நல்லது.

இருப்பினும் டப்பிங் கலைஞர்களின் பெயர்கள் மட்டும் இல்லை. இது நடப்பது வருத்தத்துக்குரிய வி‌ஷயம். காத்திருப்போம் எனப் பதிவிட்டிருந்தார். ரவீனா ட்விட்டை பார்த்த ராஷி கண்ணா, இதுகுறித்து மன்னிப்புக் கேட்டார். மேலும், தன்னுடைய நடிப்புக்கு ரவீனா குரல் அழகு சேர்த்துள்ளது எனவும் பதில் ட்விட் பதிவிட்டார்.