என்ன சொன்னீங்க..? என்ன பண்றீங்க..?? பயங்கர கடுப்பில் படத்தை விட்டே விலகிய தமன்னா.!


ராஜு காரி காதி என்ற தெலுங்கு படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கவுள்ளனர்.ஹீரோயினை சுற்றியே நகரும் இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா-வை அணுகியுள்ளனர். 

வெயிட்டான கதாபாத்திரமா இருக்கே என்று நடிகை தமன்னாவும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால், படம் பூஜை முடிந்ததும் நடிக்க முடியாது என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு பறந்துவிட்டார் அம்மணி. 

ஏன்.. என்ன காரணம் என்று கேட்டால் படத்தின் கதையில் ஏற்பட்ட மாற்றம் தான். மாற்றம் என்றால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லை. முழு கதையையே மாற்றி ஹீரோயினுக்கு உண்டான முக்கியத்துவத்தை குறைத்திருக்கிறார்கள். 

இதனை படத்தின் பூஜை முடிந்த பிறகு தான் தமன்னா-விடம் கூறியுள்ளனர். இதனால், கடுப்பின் உச்சிக்கே சென்ற தமன்னா, என்ன கதை சொல்லி நடிக்க கூப்டீங்க..? இப்போ, என்ன வேறு ஒரு கதை சொல்லிட்டு இருக்கீங்க என கூறி பேக்-அப் செய்திருக்கிறார்.