இரண்டாவது முறையாக ஷங்கர்-விஜய் கூட்டணி.! - அதுவும் இந்த படத்தின் இரண்டாம் பாகமாம்.! - அதிரடி அப்டேட்


தமிழ் சினிமாவின் ஐகான் என்று கூறப்படும் இயக்குனர் ஷங்கரின் மீது யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. அவர் கடைசியாக இயக்கிய "ஐ" மற்றும் "2.0" ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. 

இரண்டு படங்களும் தொழில் நுட்ப ரீதியில் பிசிரு கிளப்பினாலும் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், "2.0" படத்தின் கதையே பலருக்கும் பிடிக்க வில்லை. வில்லனை நல்லவனாக காட்டிவிட்டு, அவர் மீது கண்ணீர் விட்டு இறக்கப்படும் அளவுக்கு நல்லவராக காட்டிவிட்டி பிறகு ஹீரோவை வைத்து பழி தீர்ப்பது என்ன நியாயம் என்று புலம்பினார்கள் ரசிகர்கள். 

இது மட்டுமா, எந்திரன் கதை திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கபட்டுள்ளார் ஷங்கர். போதாதென்று, 24-ம் புலிகேசி படத்தில் பணத்தை போட்டு அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றது படம். வடிவேலுவும் இறங்கி வர மாட்டேன் என்று இருக்கிறார். 

ஷங்கர் மற்றும் சிம்புதேவனும் இறங்கி போக மாட்டேன் என்று பிடிவாதமாக இருகிறார்கள். இந்நிலையில், ஷங்கருக்கு ஒரு கம் பேக் படமாக இந்தியன் 2 அமையும் என எதிர்பார்த்தார்கள். பிக்பாஸ் முதல் சீசனில் இதனை அறிவித்த கமல்ஹாசன் கட்சி, அரசியல் என பிஸியாகிவிட்டார். 

Share it with your Friends