ரஜினிகாந்த் பெயரை கெடுப்பதற்கு வேறு யாரும் தேவையில்லை இவர் மட்டும் போதும் - வைரலாகும் புகைப்படம்


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருகிறார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிலதிபரின் மகனான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது படங்களை இயக்கும் வேலைகளில் படு பிசியாக இருக்கிறார்.

ஆனாலும் தனது குழந்தைக்காக நேரத்தை செலவிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இன்று சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தன் மகனான வேதுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூகவலைத்தளத்தில் வைரலானது. 

முன்னதாக, புல்வாமா தாக்குதலால் நாடே சோகத்தில் இருந்த போது தனது கணவனுடன் ஹனிமூன் சென்று குதுகலமாக இருந்ததை போட்டோ எடுத்து போட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கினார். இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு நிழவும் சூழலில் மீண்டும் நீச்சல் குளத்தில் குதுகலமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திட்டு வாங்கியுள்ளார்.

இதனை பார்த்த, நெட்டிசன்கள் சவுந்தர்யா-வை கண்டமேனிக்கி திட்டி தீர்த்தனர். இதனை பார்த்த சவுந்தர்யா தனது நீச்சல்குள புகைப்படத்தை நீக்கினார். அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தவர்கள் ரஜினிகாந்த் பெயரை கெடுப்பதற்கு வேறு யாரும் தேவையில்லை, சவுந்தர்யா மட்டும் போதும் என்று விமர்சித்துள்ளனர்.

இதோ இணையத்தில் வைரலான அந்த புகைப்படம்,

Share it with your Friends