உல்லாசம் பட நடிகையின் தற்போதைய நிலை..! - புகைப்படத்தை பார்த்தால் ஷாக் ஆகிடுவீங்க..!


உல்லாசம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை மகேஸ்வரி. இவரை பாலருக்கும் மேஹா என்றால் தான் அடையாளம் தெரியும். ஏனென்றால், உல்லாசம் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயர் மேஹா. 

இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசப்பட்டது. தமிழில் "கருத்தம்மா" என்ற படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த இவர் உல்லாசம் படத்தில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டார். 

இதனால், தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், எந்த படமும் ஓடவில்லை. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இறுதியாக, கடந்த 2000-ம் ஆண்டு தமிழில் வெளியான "அதே மனிதன்" என்ற படத்தில் நடித்தார். 

அதன் பிறகு, தன்னுடைய சொந்த பிரச்னைகள் காரணமாக சினிமாவை விட்டு ஒதுங்கி சின்னத்திரை பக்கம் சென்றுவிட்டார். ஜெயா டி.வி, ஜீ டி.வி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்துள்ளார் அம்மணி. திருமணம் ஆன இவர் தற்போது தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்கையை நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். 

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் இப்போதும் நடிக்க தயாராக இருக்கிறார் அம்மணி. அவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்தால் அவரா இது என்று ஷாக் ஆகித்தான் போவீர்கள். 

இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள்,