இயக்குனர் அட்லி-யின் அடுத்த படத்தின் ஹீரோ இவரா..! - செம்ம செம்ம..!


இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் "பிகில்" படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது விஜய் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், யோகி பாபு, விவேக், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, சாய் தீனா, ஞானசம்பந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. 

இந்த நிலையில், இயக்குனர் அட்லி ரஜினிக்காக உருவாக்கிய கதையை ரஜினியிடம் கூறியுள்ளார். ஆனால், அவரிடமிருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.