முதல்வன் 2 படத்தில் வில்லன் இந்த நடிகரா..? - ஷாக் மேல ஷாக் கொடுக்கும் ஷங்கர்..!


நடிகர் அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "முதல்வன்". 

மீடியாவில் நிருபராக இருக்கும் ஒருவர் முதல்வரை பேட்டி எடுக்க, முதல்வர் ஒரு நாள் முதலமைச்சாரா இருந்து பாரு என்று சவால் விட.. ஒரு நாள் முதல்வராக பதவியேற்கும் அர்ஜுன் ஒரே நாளில் என்னென்ன செய்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை.

இதனுடன் விறுவிறுப்பான திரைக்கதையும் படத்தை வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. இந்நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளார் என்றும் விஜய்யின் 66-வது படமாக இது இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், இந்த படத்தின் மீது முழு கவனத்தையும் இயக்குனர் ஷங்கர் செலுத்தி வருகிறார் என்று கூறுகிறார்கள். ஆம், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கமல் ஹாசன் கண்டுகொள்வதே இல்லை என்பதால். முதல்வன் இரண்டாம் பாகத்திற்கு தாவி விட்டார் ஷங்கர். 

அதெல்லாம் சரி, முதல்வன் 2 படத்தில் வில்லன் யார் என்று சொல்லுங்க மொதல்ல என்கிறீர்களா..? யார் என்று தெரிந்தால், என்னாது..? இவரா..?!? என்று கேட்கும் அளவுக்கு தான் இருக்கும்.