என்ன ஆனது இந்தியன் 2 - வெளியான அப்டேட்..!


இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் ஐகான் என்று கூறலாம். ஆனால், சமீப காலமாக அவருக்கு நேரம் சரியில்லை போல இருக்கிறது. தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற ஷங்கர் இப்போது ஒரு ஹிட் படத்திற்கு காத்திருக்கிறார். 

இவர் மலை போல நம்பியிருந்த "2.0" திரைப்படம் மோசமான கதை காரணமாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.ஆனால், ஷங்கர் படம் எப்போது வரும் என இந்திய சினிமா ரசிகர்களே காத்திருப்பார்கள்.

அந்த வகையில் ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார், இப்படம் தொடங்குவதாக கூறி 2 வருடம் கடந்து விட்ட நிலையில் படத்தின் படப்பிடிப்பு கூட தொடங்கவில்லை.

இந்நிலையில், தற்போது லைகாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனைகளுக்கு எல்லாம் சுமூகமாக முடிவு எடுக்க, படம் இந்த மாதமே தொடங்கவுள்ளதாம்.
Share it with your Friends