இதை மட்டும் பண்ணிடாதிங்க..! - பிக்பாஸ் 3 ரசிகர்களுக்கு முன்னாள் போட்டியாளர் வைஷ்ணவி கூறிய விஷயம்..!


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொடர்ந்து 100 நாட்கள் ஒளிப்பரப்பாகவுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் சீசன் 3-ல் இன்று ஒன்பதாவது நாள். நேற்று தான் போட்டியாளர்களின் நாமினேஷன் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் முழுவதும் நடந்த சம்பவங்களை எடுத்து வெறும் ஒரு மணி நேரமாக சுருக்கி ஒளிபரப்பு செய்கின்றனர். இதை வைத்து மட்டும் யாரையும் நல்லவர், கேட்டவர் என முடிவு பண்ணிடாதிங்க..! என பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர் RJ வைஷ்ணவி கூறியுள்ளார். 

இதனை தொடர்ந்து பேசிய அவர், 'நான் உள்ளே 64 நாள் இருந்தேன், கடைசியில் வெளியில் வரும் போது தான் எல்லாமே புரிந்தது. அதற்குமுன் யாரைபற்றியும் என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை' என அவர் குறிப்பிட்டுள்ளார்.