சண்ட தான், மண்ட தான் - இது பிக்பாஸ் சீசன் 3 பாட்டு


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 23-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. முதல்வாரத்தில் வனிதா விஜயகுமார் வீட்டின் கேப்டனாக தேர்வானார். 

அதனால் இரண்டாவது வாரத்தில் அவரை நாமினேஷன் செய்ய முடியாத நிலை உருவானது. 2-வது வாரத்தில் முதல் ஆளாக நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் பாத்திமா பாபு.

இந்த வாரம் இரண்டாவது சீசனில் கொடுக்கபட்ட கொலைசெய்யும் டாஸ்க் தான் கொடுக்கப்ட்டுள்ளது. கொலைகாரியாக மாறியுள்ள வனிதா விஜயகுமார் அனைவரையும் லாவகமாக கொன்று வருகிறார்.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில், எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்ட தான்.. சண்டையில் ஒடஞ்சது சாண்டியோட மண்ட தான் என்ற பாடல் பாடுகிறார்கள்.

இதோ அந்த வீடியோ,,