பிக்பாஸ் சீசன் 3-யில் கலந்து கொள்ள படுக்கைக்கு அழைத்தனர் - போட்டு உடைத்த தொகுப்பாளினி


பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி வெளிநாடுகளில் ஒளிப்பரப்பான பிக் ப்ரதர் என்ற நிகழ்சியின் டிட்டோ தான். இந்தியாவில், என்டமோல் ஷைன் நிறுவனம் இந்த நிகழ்சிகளை தொகுத்து நடத்தி வருகின்றது. 

பல்வேறு மொழிகளில் பல்வேறு மொழி தொலைகாட்சிகளில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. மேலும், தமிழில் கூட இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனுக்கும் சென்றுவிட்டது. 


நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும், தெலுங்கிலும் இரண்டு சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனுக்கு சென்றுள்ளது. 

இந்த தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டியை அணுகியுள்ளனர். முதலில் சம்மதித்த அவர் பிறகு மறுத்துவிட்டார். 

என்ன காரணம் என்றால், உங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள செய்வதால் எங்களுக்கு என்ன பயன் என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தாராம் பிக்பாஸ் குழுவில் ஒருவர். இதனால் தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளார் ஸ்வேதா ரெட்டி.