பிக்பாஸ் 3-யில் என்னுடைய ஒட்டு இவருக்கு தான் - அடித்து சொல்லும் பொன்னம்பலம்.!


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு வாரமாகிவிட்டது. இந்த வார இறுதியில் முதல் எவிக்சன் இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. யார் வெளியேறப்போகிறவர்கள் என்ற எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது. 

தினமும் வீட்டில் சண்டை, சச்சரவுகள் என பரபரப்பாக நாட்கள் நகர்ந்து கொண்டிருகின்றன. ஆனால், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முகேன், தர்ஷன், லொஸ்லியா மீது தான் ரசிகர்கள் பலருக்கும் ஈர்ப்பு உள்ளது. 

ஓவியாவுக்கு அடுத்தபடியாக லொஸ்லியா ஆர்மி மிகவும் பிரபலமாகிவிட்டது. ரசிகர்களின் எண்ணிக்கையும் இதில் அதிகமாகிவருகிறது. அவருக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.