தளபதி 64 ஹீரோயினுக்கு சம்பளம் இவ்வளவா..? - அதிர்ச்சியில் முன்னணி நடிகைகள்..!


நடிகர் விஜய் தேவாரக்கொண்டா நடித்த 'கீதா கோவிந்தம்' என்ற ஒரே படத்தில் ஹீரோயினாக மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் கன்னட நடிகையான ராஷ்மிகா. 

தற்போது தெலுங்கில் மீண்டும் விஜய் தேவரகொன்டாவுடன் 'டியர் காம்ரேட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்து 'சரிலெரு நீக்கெவரு' படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க உள்ளார். தமிழில் 'ரெமோ' படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்கிறார் ராஷ்மிகா. விஜய் அடுத்து நடிக்க உள்ள அவரது 64வது படத்தில் அவர் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 


இப்படத்திற்காக ராஷ்மிகாவுக்கு 1 கோடி வரை சம்பளம் தரத் தயாராக இருக்கிறார்களாம். அவரிடம் திடீரென கேட்டதால் அவர் ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களுக்காக தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து நடிக்க வேண்டுமாம்.