அச்சு அசல் கபில் தேவ் போல மாறிய ரன்வீர்..! -ரசிகர்கள் ஆச்சரியம் - புகைப்படம் இதோ..!


இந்திய அணி முதல் முறையாக உலகக்கோப்பை-யை வென்றது கபில்தேவ் தலைமையில் தான. கடந்த 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்ல இவர் மிகப்பெரும் காரணமாக இருந்தார். 

60 ஓவர்கள் கொண்ட இறுதி போட்டியில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 54.4 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ( அந்த காலத்துல 150 என்பதே கடினமான இலக்கு தான் பாஸ் ) களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரன்களை சேர்க்க தடுமாறியது. 

காரணம், கபில் தேவ், 11 ஓவர்கள் பந்து வீசி வெறும் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஆட்ட முடிவில், 52 ஓவர்களில் 140 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட் ஆனது. இதனால், இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்று சாதனை படைத்தது.


இந்நிலையில் அந்த உலகக்கோப்பையை மையமாக கொண்டு ரன்வீர் சிங் நடிப்பில் "1983" படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில் தமிழ் நடிகர் ஜீவாவும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியை பார்க்க முடியாத நமக்கு இந்த படம் சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

இப்படத்தில் கபில்தேவ்-ஆக நடிக்கும், ரன்வீர் சிங் அச்சு அசல் கபில் தேவ் போலவே மாறியுள்ள புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது, அதை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர், இதோ.. Share it with your Friends