நொண்டி சாக்கு சொல்லி சிம்பு நிராகரித்த ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்..!


நடிகர் சிம்பு எப்போதும் ஒரு சர்ச்சையை சுற்றிக்கொண்டே இருப்பார். அல்லது சர்ச்சை அவரை சுற்றிவந்து கொண்டிருக்கும். கடந்த ஏழு வருடங்களில் வெறும் மூன்று படங்களை 5 படங்களை தான் ரிலீஸ் செய்துள்ளார். 

அதில், வாலு மற்றும் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் ஏழு வருடத்திற்கு முன்பே தொடங்கப்பட்டது ரிலீஸ் ஆகாமல் கிடந்தது. AAA என்ற ஒரு படம் எதற்கு எடுத்தார் என்றே தெரியவில்லை. 


செக்க சிவந்த வானம் ஒரு மல்டி ஸ்டாரர் படம். இடையில் அச்சம் என்பது மடமையாடா என்ற ஒரு படம் தான் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றது. இப்படி தன்னுடை சினிமா வாழ்க்கையில் தட்டு தடுமாறி 35 வருடங்களை பூர்த்தி செய்துள்ளார் சிம்பு.

இந்நிலையில், ஹீரோயினை மாத்துங்க.. சீனை மாத்துங்க என்று நொண்டி சாக்கு சொல்லி இவர் நடிக்க மறுத்த படம் ஒன்று ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 

அது, கே.வி.ஆனந்த் இயக்கிய "கோ" படம் தான். இந்த படத்தில் ஜீவா-வுக்கு பதிலாக சிம்பு தான் முதலில் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்த நிலையில் ஹீரோயினை மாத்துங்க என்று கோரிக்கை விடுத்தார். ஆனால, இயக்குனரோ ஹீரோவை மாற்றிவிட்டார்.
You May Like