திருமணம் குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை ஓவியா..??!


தமிழில் சில படங்களில் நடித்திருந்த நடிகை ஓவியா பட வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். 

அது அவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதில் அவர் விளம்பர பட நடிகர் ஆரவ் என்பவரை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். இடையில், மருத்துவ முத்தம் என்ற சர்ச்சையில் சிக்கினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுத்த பதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.