"இதெல்லாம் வேண்டாம்-மா என்று கெஞ்சிய மகள்.." - தாய் செய்த அதிர வைக்கும் சம்பவம்.! - அதிர்ச்சி


கேரளா-வை சேர்ந்த 34  வயதான மஞ்சுஷா என்பவர் பெண் தனது கணவர் இறந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மகள் மீராவுடன் தனியாக வசித்து வந்தார். 

இப்படியான சூழலில் மஞ்சுஷா-வுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரை விட ஐந்து வயது குறைவான வாலிபர் அனீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாகியுள்ளனர். 

நட்பு படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட காம ஆசை கண்ணை மறைத்து. மஞ்சுஷாவும், அனீஷும் அடிக்கடி அவர்களது வீட்டில் களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில், ஒருநாள் வீட்டில் இருவரும் ஒட்டுத்துணி இன்றி தனிமையில் இருப்பதை மகள் மீரா பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தத் தவறான நட்பைக் கைவிடுமாறு தாயிடம் மீரா கெஞ்சியுள்ளார். 

இதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுஷா மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கள்ளகாதலன் அனீஷுடன் சேர்ந்து கொண்டு மகள் மீராவின் உடலைக் கிணற்றில் வீசிவிட்டனர். 

மகளை கொலை செய்துவிட்டு பின்னர் தன் மகள் காதலனுடன் ஓடிவிட்டாள் என உறவினர்களிடம் கூறிய மஞ்சுஷா அவரைத் தேடிப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். 

பல நாட்களாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த மஞ்சுஷாவின் தாய் வல்சலா இதுபற்றிப் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அனீஷும் மாயமானது தெரியவந்துள்ளது. 

இதைத் தொடர்ந்து போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியதில் மஞ்சுஷா, அனீஷ் இருவரும் நாகர்கோவிலில் வீடு எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்து தனிப்படை அமைத்து இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். 

விசாரணையில் மஞ்சுஷா உண்மையை கக்கிவிட மகள் மீராவின் உடலைக் கிணற்றிலிருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாயே மகளைக் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share it with your Friends