நடிகை ஸ்ரேயா என்ன ஆனார்..? - இப்போது என்ன செய்கிறார் பாருங்க..!


நடிகை ஸ்ரேயா தமிழில் எனக்கு இருபது உனக்கு பதினெட்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி, விஜய், ஜெயம் ரவி என பலருடன் ஜோடியாக நடித்தவர். கவர்ச்சி நாயகியாக வலம் வந்தாலும் அவருக்கு தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் அமைவில்லை. 

பிறகு மீண்டும் தெலுங்கு படங்களை நோக்கி போய்விட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த தன் காதலர் ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் நடித்து வந்தாலும் ஹீரோயின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

இருப்பினும் தமிழில் நரகாசுரன் படத்தில் கமிட்டானார். தற்போது விமலுக்கு ஜோடியாக சண்டக்காரி தி பாஸ் என்ற படத்தில் நடிக்கவுள்ளாரம். மலையாளத்தில் ஹிட்டான "மை பாஸ்" படத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. 


இப்படத்தை ஆர்,மாதேஷ் இயக்குகிறார். இவர் விஜய் நடித்த மதுர, பிரசாந்த நடித்த சாக்லேட், திரிஷா நடித்த மோகினி மற்றும் மிரட்டல் படத்தை இயக்கியவர்.
Share it with your Friends