மதுபோதையில் அரைகுறை ஆடையில் ரசிகர்களுடன் பேசிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா - அரங்கேறிய கொடுமை..!


லைவ் சாட்டிங் செய்து கொண்டிருந்த யாஷிகாவுக்கு ஆண் நண்பர் ஒருவர் லிப்லாக் கொடுத்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து உள்பட சில படங்களில் நடித்திருந்தபோதும், பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே இன்னும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, நடிகை ஐஸ்வர்யா தத்தாவும், யாஷிகாவும் நெருங்கிய தோழிகள் ஆகினர். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போதும் இவர்களது நட்பு இன்றளவும் தொடர்கிறது. தற்போது இருவருமே பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் ஓராண்டு நிறைவடைந்ததை, கடந்த மாதம் இருவரும் சேர்ந்து தனியாகக் கொண்டாடினர். அப்போது அவர்கள் இருவரும் லைவ் சாட்டிங் செய்தனர். இருவருக்குமே சமூகவலைதளங்களில் அதிக நண்பர்கள் இருப்பதால், அந்த சாட்டிங்கில் ரசிகர்கள் அதிகம் பேர் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் மது போதையில் இருப்பது போல் இருக்கிறது. ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அப்போது அதிரடியாக அந்த வீடியோவிற்குள் இரண்டு ஆண் நண்பர்கள் வருகின்றனர். அவர்களில் ஒருவர் யாஷிகாவிற்கு லிப்லாக் முத்தம் தருகிறார். அதனை ஐஸ்வர்யா சிரித்துக் கொண்டே பார்க்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் மஹத்தைக் காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் யாஷிகா. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னும், தொடர்ந்து மஹத்தை காதலிப்பேன் என்பது போல், கமல் முன்னிலையிலேயே கூறினார். தற்போது அவர்கள் இருவரும் புதுப்படம் ஒன்றில் ஜோடியாக நடித்து வருகின்றனர். விரைவில் மஹத்திற்கு, அவரது காதலி பிராச்சியுடன் திருமணம் நடைபெற உள்ளது.

இதில், கொடுமை என்னவென்றால் லைவ் சாட்டிற்கு இடையே வந்த யாஷிகாவிற்கு நண்பர் ஒருவர் அவரின் முகத்தை பிடித்து லிப்-லாக் முத்தமிடுவது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Share it with your Friends