தமிழில் மீண்டும் அனுப்பமா - முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார்..!


மலையாளத்தில் வெளியான "ப்ரேமம்" திரைப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு அந்த படத்தில் நடித்த மூன்று ஹீரோயின்களுக்கும் நல்ல மவுசு கிடைத்தது. 

சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டின் ஆகியோர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள். நடிகை அனுப்பமா பரமேஸ்வரன் தமிழில் தனுஷ்-ன் கொடி படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். 

ஆனால், அந்த படம் சரியாக போகாத காரணத்தினால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் மளையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார். 

இந்நிலையில், மீண்டும் தமிழில் அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.