இந்த படத்தை ரீமேக் பண்ணனும்-னு ஆசையா இருக்கு.!- ஆனால் என்னால் நடிக்க முடியாது..! - சியான் விக்ரம்


சியான் விக்ரம்-ற்கு தனியாக ரசிகர் வட்டம் இருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கு வேறுபாடு காட்டுவது. கதைக்காக எந்த அளவுக்கு வேண்டுமானலும் உடலையும், மனதையும் வருத்திக்கொள்வது என்றால் சியானுக்கு நிகர் சியான் தான். 

ஆனால், இவரது படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்றால். இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உடலை வருத்தி என்ன செய்வது, கதையிலும், திரைக் கதையிலும் கவனம் செலுத்துவதில்லையே என பொதுவான ரசிகர்கள் கூறுவார்கள். 

அந்த வகையில், தற்போது கடாரம் கொண்டான் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சியான். இந்நிலையில், சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் சிவாஜி கணேஷன், கமல் ஆகியோரை பார்த்து தான் எனக்கு நடிப்பின் மீது ஆர்வமே வந்தது.