பாட்டில் கேப் சேலஞ்ச் - நடிகை ஆடா ஷர்மா எப்படி திறந்திருக்கிறார் பாருங்க..!


இணையத்தில் ஏதாவது ஒரு சேலஞ்ச் வைரலாகி கொண்டே இருக்கும். ஐஸ்பக்கெட் சேலஞ்ச், கீகீ சேலஞ்ச் ஆகியவற்றை தொடந்து பிரபலமாகி வருகிறது பாட்டில் கேப் ஒப்பன் சேலஞ். 

இதில் பங்கேற்பவர்கள் பாட்டிலை ஒருவர் கையில் கொடுத்து விட்டு ஒற்றை காலால் ஒரு ஒரு முறையில் பாட்டில் மூடியை திறந்து அதை வீடியோ எடுத்து வெளியிடவேண்டும். 

ஹாலிவுட் நடிகர் ஜேசன் என்பவர் இதை செய்ததும் அது உலக அளவில் பிரபலம் ஆனது. தற்போது இந்திய பிரபலங்கள் கூட இதை செய்து வருகின்றனர். இந்நிலையில், அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் சிக்கும் பிரபல நடிகை ஆதா ஷர்மா இதை செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஆனால் அவர் காலால் மூடியை திறக்காமல்.. வடிவேலு பாணியில் முடியல.. என்று சொல்லும்  அளவுக்கு எதையோ செய்து வைத்திருக்கிறார் அது என்ன என்று நீங்களே பாருங்க...