படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த கொலைகாரன் பட நடிகை..!


தொடர்ச்சியாக வித்தியாசமான கதைக்களங்கள் வில்லங்கமான தலைப்புகளுடன் மட்டும்  நடித்து வரும் இசையமைப்பாளர் கம் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகராக அவதாரம் எடுத்து நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என பல ஹிட் படங்களை கொடுத்தார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த கொலைகாரன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்படத்தில் தமிழ் சினிமாவின் புதுவராவாக நடிகை ஆஷிமா நார்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சினிமாவில் நுழைவதற்கு முன்பு மாடல் அழகி , மிஸ் இந்தியா குளோபல் போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்று மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர் பின்னர் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான ‘ நாட்டகம் ‘ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் பரீசியமானவர். 


இந்நிலையில் தற்போது கொலைகாரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள இவர் மாடல் அழகி என்பதால் அடிக்கடி கவர்ச்சி களத்தில் குதித்து கிளாமராக போட்டோஷூட் நடத்திவருகிறார். அந்தவகையில் தற்போது மீண்டும் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார். 


கொலைகாரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிக் பாஸ் ஆரவுடம் இவர் நடித்துள்ள "ராஜ பீமா" திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
Share it with your Friends