இந்த டாப் ஹீரோவுடன் நடிக்க சம்மதம் சொல்வாரா ஐஸ்வர்யா ராய் - எதிர்பார்ப்பில் திரையுலகம்


சிரஞ்சீவி நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா, தமன்னா, அமிதாப்பச்சன், சுதீப், விஜய் சேதுபதி உள்பட பலர் நடித்துள்ளனர். சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது.

இதையடுத்து, கொரட்டல்ல சிவா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிரஞ்சீவி. இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டியில் நடித்துள்ள நயன்தாரா, அனுஷ்கா ஆகிய இருவருமே ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் சிரஞ்சீவி, பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை தனது அடுத்த படத்தில் நாயகியாக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். அதனால் ஐஸ்வர்யாராயிடம் பேசி வருகின்றனர்.

ஐஸ் என்ன சொல்லப்போகிறார் என்பது தான் இப்போது தெலுங்கு சினிமாவின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
You May Like

இந்த டாப் ஹீரோவுடன் நடிக்க சம்மதம் சொல்வாரா ஐஸ்வர்யா ராய் - எதிர்பார்ப்பில் திரையுலகம் இந்த டாப் ஹீரோவுடன் நடிக்க சம்மதம் சொல்வாரா ஐஸ்வர்யா ராய் - எதிர்பார்ப்பில் திரையுலகம் Reviewed by Tamizhakam on July 12, 2019 Rating: 5
Powered by Blogger.