உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய லீக் போட்டியில் இந்தியஅணி வங்கதேச அணியை எதிர்கொண்டது.
பந்து வீச்சில் வீக்காக இருக்கும் வங்கதேச அணி பேட்டிங்கில் சிறந்த லைன்அப்-பை கொண்டுள்ளது.
இந்திய அணி நிர்ணயித்த 315 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி வேக வேகமாக முன்னேறி வந்தது. இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒரு கட்டத்தில், மூன்று ஓவர்களில் வெறும் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை வங்க தேச அணி அடைந்தது.
ஒரு பக்கம் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஷமி ரன்களை வாரிக்கொடுத்து கொண்டிருக்க பும்ராவை மலை போல நம்பினார் கோலி. 47வது ஓவரை வீசிய பும்ராவின் முதல் நான்கு பந்துகளை ஒரு பவுண்டரி உட்பட ஏழு ரன்களை எடுத்துவிட்டது வங்க தேச அணி.
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் வங்க தேச வீரல் ரூபல்-லை கிளீன் போல்டாக்கினர் பும்ரா. என்னுடைய ஓவரில் ஏழு ரன்களை அடித்து விட்டீர்களா..? என்ற கோபத்தின் உச்சியில் இருந்த பும்ரா விக்கெட் விழுந்ததும் ஆக்ரோஷமாக கத்தினார்.
உலக அளவில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் பும்ரா இதுவரை எந்த போட்டியிலும் இதுபோல ஆக்ரோஷமாக கத்தியது கிடையாது. இதனை பார்த்த ரசிகர்கள் பும்ரா-வையே டென்ஷன் பண்ணிட்டீங்களே டா என்று ஷாக்காகி கிடக்க, கோபம் அடங்காத பும்ரா ஓவரின் இறுதி பந்தில் இறுதி விக்கெட்டை போல்டாக்கி ரசிகர்களை நிம்மதி பெரு மூச்சு விட வைத்தார்.
நேற்றைய போட்டி மறக்க முடியாத ஒரு போட்டியாக மாறியது. இதோ அந்த வீடியோ,