நடித்த படமே ரிலீஸ் ஆகாத நிலையில் மீண்டும் கேப்மாறி நடிகருடன் ஜோடி போடும் அதுல்யா ரவி.! - இது தான் காரணமா..?


காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகமான அதுல்யா ரவிக்கு "நாடோடிகள் 2", "அடுத்த சாட்டை","கேப்மாறி" என்று வரிசையாக படங்கள் வர இருக்கின்றன.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் திரைப்படம் தான் "கேப்மாறி". இந்த படத்தில் நடிகர் ஜெய்-க்கு ஜோடியாக நடிக்கிறார் அதுல்யா. இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில், மீண்டும் ஜெய்-யுடன் ஒரு படத்தின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

அறிமுக இயக்குனர் வெற்றிச்செல்வன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். ஒரு படம் ரிலீஸ் ஆவதற்குள் மீண்டும் ஆதே ஹீரோவுடன் இணைய என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 


நடிகையும், ஜெய்-யின் முன்னாள் காதலியுமான நடிகை அஞ்சலியும் , அதுல்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். இதனால், அஞ்சலி சொல்லித்தான் மீண்டும் ஜெய்-யுடன் அதுல்யா இணைகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.
You May Like
Share it with your Friends