அப்பா வயது ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யவுள்ள நடிகை திரிஷா..!


நடிகை திரிஷா 1999-ல் ஜோடி படத்தில் அறிமுகமாகி 20 வருடங்களாக சினிமாவில் நீடிக்கிறார். அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினிகாந்துடன் நடிக்கவில்லை என்ற குறையும் பேட்ட படத்தில் சேர்ந்து நடித்ததன் மூலம் தீர்ந்தது. 

அவர் காலத்தில் நடிக்க வந்த கதாநாயகிகள் அக்காள், அண்ணி கதாபாத்திரங்களுக்கு மாறிய பிறகும் திரிஷா தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பது சக நடிகைகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். பேய் வேடங்களையும் ஏற்கிறார். மேலும், மார்க்கெட் சுத்தமாக அவுட் என்பதால் வயது வித்தியாசமின்றி நடிகர்களுடன் ஜோடி போட சம்மதம் சொல்கிறார் அம்மணி. 

அந்த வகையில், 60 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் கமர்ஷியல் படம் என்பதால் படத்தில் ரொமான்ஸ் காட்சிகளும் இருக்கிறது என்கிறார்கள் படகுழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள்.