பும்ரா - அனுப்பமா காதல் சர்ச்சை - பும்ரா எடுத்த அதிரடி முடிவு..!


கொடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரேமம் பட நடிகை அனுபமா பரமேஸ்வரன். தற்போது சில புதிய தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

அவருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும் இடையே காதல் என கிசுகிசு ஒன்று இருந்து வருகிறது. ஆனால், அது பற்றி அனுபமா இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், பும்ராவா யார் அது ? எனக் கேட்டிருக்கிறார். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.

டுவிட்டரில் பும்ராவை பின் தொடர்கிறார் அனுபமா. கூடவே, தோனி, அபிஷேக் சர்மா ஆகிய கிரிக்கெட் வீரர்களையும் பின் தொடர்கிறார்.

இதுநாள் வரையில் அனுபமாவை டுவிட்டரில் Follow செய்து வந்த பும்ரா, இப்படி ஒரு காதல் சர்ச்சை கிளம்பியதும் அவரை Unfollow செய்துவிட்டார்.